நடனமாடும் நாப்தலின் உருண்டைகள்
தேவையான பொருட்கள்:
சோடா நீர், நாப்தலின் உருண்டைகள், ஒரு சிறிய கண்ணாடி பீக்கர்
செயல்முறை :
கண்ணாடி பிக்கரில் சோடா நீரை ஊற்றி அதில் நாப்தலின் உருண்டைகளைப் போட வேண்டும். அப்போது சிறிது நேரத்தில் நாப்தலின் உருண்டைகள் நடனமாடிக் கொண்டே மேலே எழும்பி வரும் . பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவை கீழே மூழ்கி விடுகின்றன. ஏன் இவ்வாறு நிகழ்கின்றன என்ற அறிவியல் உண்மையை நாம் கண்டறிதல் வேண்டும்.
காரணம்:
நாப்தலின் உருண்டைகளின் அடர்த்தி சோடா நீரின் அடர்த்தியை விட அதிகமாக இருப்பதால் சோடா நீரில் நாப்தலின் உருண்டைகள் மூழ்கி விடுகின்றன. பின்னர் நாப்தலின் உருண்டையில் சோடா நீரில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு குமிழ்கள் ஒட்டிக் கொள்வதால் அதன் பருமன் அதிகமாகி அடர்த்தி குறைந்து உருண்டைகள் மேலே வருகிறது . மேலே வந்தவுடன் ஒட்டிக் கொண்டிருந்த கார்பன் டை ஆக்சைடு வாயு குமிழ்கள் காற்றில் பட்டு உடைந்து விடுவதால் அதன் அடர்த்தி அதிகமாகி மீண்டும் சோடா நீரில் மூழ்கி விடுகிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق