"Science, Technology, Engineering, Mathematics - The science of today is the technology of tomorrow."
41 Upper Primary Schools (6-8 std)
5000+ Students
30+ Simple Science Experiments
2 STEM Ambassadors

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை
🏆 வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி

டேனிஸ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

வகுப்பு: 7 | சேலம் மாவட்டம், கடையாம்பட்டி ஒன்றியம்

🏆

மாநில அளவில் இரண்டாம் இடம்!

வானவில் மன்ற போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி - 12.02.2025

சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம்

🔬 அறிவியல் கண்டுபிடிப்பு

  • 💡 மலையில் நிலச்சரிவு கண்காணிப்பு கருவி
  • 💡 காட்டுத்தீ பரவலை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி
  • 💡 இயந்திரகற்றல் (ML) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்
  • 💡 Microsoft Makecode & Microcontroller அடிப்படையில்

💡 எப்படி இந்த எண்ணம் தோன்றியது?

மாதந்தோறும் எங்கள் பள்ளியில் வானவில் மன்றம் மிக சிறப்பாக நடைபெறும். அப்போது நம் சுற்றுசூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், வட்டார அளவில் நடைபெற உள்ள வானவில் மன்ற போட்டிகளில் கலந்து கொள்ளவும் தெரிவித்தனர்.

எங்கள் டேனிஸ்பேட்டை பள்ளி சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளதாலும், என் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள மலைகிராமத்தில் வாசிப்பதாலும் அங்கு கோடை காலத்தில் அடிக்கடி நடைபெறும் காட்டுத்தீ பற்றி அவ்வப்பொழுது கூறுவர். இதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த கருவியை கண்டறியும் எண்ணம் உண்டானது.

👥 வழிகாட்டிகள்

திருமதி புவனா - தலைமை ஆசிரியை:
காலநிலை மாற்றம் குறித்தும், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி எங்களை ஊக்குவித்தார்.

திரு. தங்கராஜ் - வன சரக அலுவலர்:
டேனிஸ்பேட்டை வன சரக அலுவலர் எங்கள் திட்டத்தை எடுத்துரைத்தபோது பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

திரு. ஐய்யப்பன் - ஆசிரியர் பயிற்றுநர்:
Microsoft Makecode மூலம் எவ்வாறு மென்பொருள் உருவாக்குவது என்றும் அதனை எவ்வாறு Microcontroller களில் உள்ளீடு செய்து வெளியீடுகளை பெறுவது போன்ற பயிற்சிகளையும் வழிக்காட்டுதல்களையும் அளித்தார்.

📸 படத் தொகுப்பு

🚀 எதிர்கால திட்டங்கள்

  • 📋 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பார்வைக்கு திட்டத்தை கொண்டுசெல்ல உள்ளோம்
  • 🏛️ தமிழக அரசு பெயரில் காப்புரிமை பெற முயற்சி
  • 🛰️ ISRO அனுமதியுடன் நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ நடைபெற அதிக வாய்ப்புள்ள இடங்களில் இந்த கருவியை பொருத்துதல்
  • 📱 பிரத்தியேக Mobile App வடிவமைப்பு (GPS & Cloud storage உடன்)
  • ⚡ உடனுக்குடன் மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் அமைப்பு
  • 🌍 வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு (பரிசு)

🌟 சாதனைகள்

  • 🏆 38 மாவட்டங்களிலிருந்து 152 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி
  • 🥇 சேலம் மாவட்டத்தில் முதலிடம்
  • 🥈 மாநில அளவில் இரண்டாம் இடம்
  • 📜 பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடமிருந்து வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்
  • ✈️ வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு