வட்டார அளவிலான அறிவியல் பழகு (வானவில் 🌈 மன்றம்) போட்டிகள் :
கடந்த 21.11.2025 (வெள்ளி) அன்று GHS தீவட்டிப்பட்டி பள்ளியில் காலை 10 மணி அளவில் அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளிகளிலும் இருந்து பள்ளி அளவில் வெற்றி பெற்ற குழு தலைவர்கள் கலந்து கொண்டவட்டார அளவிலான அறிவியல் பழகு (வானவில் 🌈 மன்றம்) போட்டிகள் நடைபெற்றது . முன்னதாக வட்டார வள மேற்பார்வையாளர் போட்டியின் விதிமுறைகளை எடுத்துரைத்து நிகழ்வை துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் படைப்புகள், செயல்திட்டங்கள் மற்றும் ஆய்வறிக்கைகளை சமர்பித்து தங்கள் அறிவியல் திறன்களை வெளிப்படுத்தினர். மேலும் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் STEM தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.